SRI SRINIVASA PERUMAL
ஶ்ரீ ஶ்ரீநிவாசப் பெருமாள்
ஸ்லோகம்
——————
ஶ்ரீ சிம்மபுர்யாம் ஸுகமாவஸந்தம்
ராஜத் கிரீடம் த்ருத சங்க சக்ரம்
ஶ்ரீ ஶ்ரீநவாஸம் ச்ரித பாரிஜாதம்
ஶ்ரீ பூமிதேவ்யா ஸஹிதம் நமாமி
ஶ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்தினாம்
சிம்மபுரி நிவாஸாய ஶ்ரீநிவாஸாய மங்களம்.
பாடல்
அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய்
என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்
திருவேங்கடத்தானே
புகல் ஒன்றில்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
மந்திரம்
ஓம் நமோ வேங்கடேசாய
வழிபாட்டுக்கு உகந்த நாள்:
புதன்கிழமை, சனிக்கிழமை
ஏகாதசி, திருவோணம்
நம் திருக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்கள்:
பங்குனி : பிரம்மோற்சவம் - 13 நாள்கள்
சித்திரை : வருடாபிஷகம் - 2 நாள்கள்
வைகாசி : வசந்த உத்ஸவம் - 10 நாள்கள்
ஆடி : ஜ்யேஷ்டாபிஷேகம் - 4 நாள்கள்
ஆவணி : பவித்ர உத்ஸவம் - 5 நாள்கள்
ஆவணி : ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - 1 நாள்
புரட்டாசி : மகோத்ஸவம் - 30 நாள்கள்
மார்கழி : வைகுண்ட ஏகாதசி - 20 நாள்கள்