நமது ஆலயத்தில் மூலவர் ஸ்ரீ தேவி பூமி தேவி ஸமேத ஸ்ரீனிவாசபெருமாளுக்கு மாதத்தில் வரக்கூடிய அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் திருமஞ்சனம் செய்யப்படும். ப்ரார்த்தனை திருமஞ்சனம் உற்சவ மூர்த்திக்கு மட்டும் நடைபெறுகிறது. ஒவ்வொரு திரவ்யத்திற்கும் விஷேசமான பலன்கள் சொல்லியிருக்கிறது அதன் முறைலே இங்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் பொடி, திரவ்யபொடி, பஞ்சாமிர்தம்(பழங்கள்), தேன் சந்தனம். திருமஞ்சனம் செய்யபடுகிறது. பிறகு ஸ்நபனமாக கும்பதீர்த்தம் சேர்க்கப்படுகிறது. இதனால் பகவான் குளிர்ச்சி அடைகிறார். சான்னித்யம் கிடைக்கிறது.