Commencement of Sri Dhanvanthiri Homam

  • Saturday 22 December 2018

திருமால் எடுத்த 10 அவதாரங்களை தவிர்த்து தனியாக எடுத்த அவதாரம் இது. இவரை வழிபடுவதால் உடலில் உள்ள சகல வியாதிகளும் விலகி வாழ்வில் சௌக்கியங்கள் கிடைக்கிறது என்று ப்ரும்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடைபெற்ற சண்டையில் தேவர்கள் வலுவிழந்து விட்டார்கள். பிறகு ப் ரும்மனிடம் இந்திரனிடமும் முறையிட்டார்கள் உடனே பாற்கடலில் சயனித்து கொண்டிருந்த திருமாலிடம் முறையிட்டனர் அவர் உடனே பாற்கடலை கடைவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் அதில் நானே அவதாரம் எடுத்து உங்களுக்கு அம்ருதம் வழங்கி அதன்மூலம் நீங்கள் அசுரர்களை வென்று நிம்மதியாக இருக்கலாம் என்றார் அப்பேர்பட்ட ஸ்ரீ தன்வந்தரி பகவானுக்கு 10 நாட்களுக்கு டிசம்பர் மாத கடைசியில் நமது ஆலயத்தில் ஸ்ரீ தன்வந்தரி யாகம் செய்யப்படுகிறது. இதில் கலந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் பெற்று சகல வியாதிகளிலிருந்து நம்மை காத்து கொள்ளலாம்.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.