Thirukkarthigai Vaikanasa Deepam

  • Thursday 22 November 2018

ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலங்களில் ஆகம முறையில் ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு உற்சவம் செய்ய சொல்லியிருக்கறது. அந்த முறையே கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று. தீப உற்சவம் செய்யப்படுகிறது. பொதுவாக கார்த்திகை மாத மக்கள் வழக்கத்தைவிட அதிகமாக தீபம் ஏற்றுவார்கள் தீபம் என்றாலே மஹாலக்ஷ்மியாக நினைத்து வழிபடுவோம். இந்த கார்த்திகை தீப நாள் அன்று மாலை நித்ய பூஜை முடிந்தவுடன் அனைத்து தீபங்களையும் ஏற்றி பூஜை செய்து உலக மக்கள் அனைவருடைய நலத்தையும் ப்ராதித்து உலக நன்மைக்காக ப்ராதித்து இறைவனிடம் காண்பித்து அனைத்து சன்னதி மற்றும் கோபுரத்தில் வைப்பார்கள். மேலும் ராஜகோபுரத்திற்கு வெளியே பனை ஓலையினால் கோபுரமாக வடிவு அமைத்து அதனை பூஜித்து இறைவனிடம் காண்பித்த தீபத்தை அதில் வைத்து நன்கு ஏறியவிட்டு அதை தரிசனம் செய்வது மிக புண்ணியமாக கூறப்படுகிறது மஹாலக்ஷ்மியின் அருளும் கிடைக்கிறது. இந்த உத்சவம் நமது ஆலயத்திலும் நடைபெற்று வருகிறது.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative