Navarathiri 8th Day Ubayam

  • Wednesday 17 October 2018

புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் ஒன்பது ராத்ரி(இரவு) அம்பாளை, தாயாரை வழிபடும் திருநாள்  நவராத்திரி  ஆகும். இதனை சாரதா நவராத்திரி என்றும் அழைப்பார்கள். இதில் பலகை தெய்வீக  வர்ணம் பூசிய பொம்மைகள் வாங்கி படிகள் அமைத்து கொலு வைப்பார்கள் இரவு நேரத்தில் பூஜை செய்து பாட்டு பாடி வழிபாடு செய்வார்கள் ஒன்பது நாளில் முதல் மூன்று நாள் துர்கையாகவும் அடுத்து வரும் மூன்று நாள் ஸ்ரீ மஹா லஷ்மியாகவும் கடைசி வரும் மூன்று நாள் சரஸ்வதியாகவும் நினைத்து வழிபடுவார்கள் மேலும் நவக்ஹிரக நாயகனாக விளங்கும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சிணாயன காலம் இந்த காலம் தேவர்களுக்கு இரவு காலமாகும் ஆகையால் அம்பாளை பெண் தெய்வங்களை வழிபடும் காலமாகும்.பல ஆலயங்களில் சிறப்பு ஹோமங்கள் அபிஷேகங்கள் பூஜை செய்து வழிபாடு நடைபெறுகிறது. இதனால் அம்பாள் சந்தோஷம்    அடைந்து பக்க்தர்களுக்கு அருள் புறிகிறாள்  நமது ஆலயத்தில் ஸ்ரீ மகாலட்சுமி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், ஒன்பது நாட்களுக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெறுகின்றன.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.