Purattasi 4th Saturday

  • Saturday 14 October 2017

ஸ்ரீ பெருமாள் என்றாலே நமக்கு திருப்பதி ஸ்ரீ வேங்கடமுடையான்  வெங்கடாஜலபதி பெருமாள் தான் சொல்லுவார்கள்.

புரட்டாசி மாதத்தில் தான் ஸ்ரீ பெருமாள் ஒரு சமயம் ஸ்ரீ மகாலஷ்மி தேவியை அலட்சய படுத்தியதர்க்காக தாயார் கோபித்து கொண்டு ஸ்ரீ பெருமாளை விட்டு பிரிந்து விட்டார். ஸ்ரீ மகாலஷ்மி தேவியை பிரிந்து பெருமாளால் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க முடியவில்லை.   ஆகையால் ஸ்ரீ பெருமாள் இந்த புரட்டாசி மாதத்தில் தான் தாயாரை தேடி கண்டுபிடித்து திருவோணம் நட்சத்திரத்தில் பக்தர்களுக்கு அருள் அளிப்பதற்காக அர்ச்சாவதார மூர்த்தியாக தோன்றிய நாள் இதுவாகும். இது திருப்பதி புராணத்தில் கூறப்படுகிறது. ஆகையால் இந்த மாத முழுவதும் அனைத்து ஸ்ரீ பெருமாள் ஆலயங்களிலும் விசேஷ பூஜைகள் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்வார்கள். இந்த மாதத்தில் நமது ஆலயத்திலும் 30 நாட்களும் விசேஷமாக  கொண்டாடபடுகிறது.

ஜோதிட சாஸ்த்திரத்திலும் இதை இந்த மாதத்தில் தான் புரட்டாசியை கன்னி மாதம் என்று சொல்லுவார்கள் இந்த கன்னி ராசியில் புதன் உச்சமும் ஆட்சியும் அடைகிறார். புதனுக்கு அதி தேவதை ஸ்ரீ விஷ்ணு ஆகையால் பெருமாளை வழிபாடு மாதமாக இருக்கிறது. மேலும் புதனுக்கு நட்பு கிரகம் சனி என்பதால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் விசேஷமாக கொண்டாடபடுகிறது. நமது ஆலயத்தில் புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு தோமாலை சேவை, விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம், தங்கரத சேவை ஆகியவை உண்டு. 

   

Click more

https://heb.org.sg/purattasi2017.aspx

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.