Purattasi 4th Saturday


ஸ்ரீ பெருமாள் என்றாலே நமக்கு திருப்பதி ஸ்ரீ வேங்கடமுடையான்  வெங்கடாஜலபதி பெருமாள் என்று சொல்லுவார்கள். ஒரு சமயம் புரட்டாசி மாதத்தில் ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ மகாலட்சுமி தேவியை அலட்சியப்படுத்தியதால் தாயார் கோபித்து கொண்டு ஸ்ரீ பெருமாளை விட்டு பிரிந்து விட்டார். ஸ்ரீ மகாலட்சுமி தேவியின் பிரிவை தாங்காத ஸ்ரீ பெருமாள் இந்த புரட்டாசி மாதத்திலேயே தாயாரை தேடி கண்டுபிடித்து திருவோணம் நட்சத்திரத்தில் பக்தர்களுக்கு அருள்புரிய அர்ச்சாவதார மூர்த்தியா தோன்றிய நாள் இதுவாகும் என்று திருப்பதி புராணத்தில் கூறப்படுகிறது. ஆகையால் இந்த மாதம் முழுவதும் அனைத்து ஸ்ரீ பெருமாள் ஆலயங்களிலும் விசேஷ பூஜைகள் மற்றும் அன்னதான பூஜைகள் செய்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வார்கள். இந்த மாதத்தில் நமது ஆலயத்திலும் 30 நாட்களும் விசேஷமாக  கொண்டாடப்படுகிறது.

ஜோதிட சாஸ்த்திரத்திலும் புரட்டாசியை கன்னி மாதம் என்று சொல்லுவார்கள். இந்த கன்னி ராசியில்தான் புதன் உச்சமும் ஆட்சியும் அடைகிறார். புதனுக்கு அதி தேவதை ஸ்ரீ விஷ்ணு, ஆகையால் புரட்டாசி  ஸ்ரீ பெருமாளின் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக இருக்கிறது. மேலும் புதனுக்கு நட்பு கிரகம் சனி என்பதால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் விசேஷமாக கொண்டாடபடுகிறது. நமது ஆலயத்தில் புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு தோமாலை சேவை, விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம், தங்கரத சேவை ஆகியவை உண்டு.   ​​​​​​

When you say Perumal, devotees of Vishnu more often than not immediately think of Lord Venkatachalapathi of Thirupathi.  It was in the month of Purattasi that Sri Mahalakshmi left Sri Mahavishnu in anger. Lord Mahavishnu could not reside in Vaikuntam without Mahalakshmi and hence, he went in search of her in the month of Purattasi and later on the day of the Thiruvonam star appeared as Archavathara Moorthi to bless His devotees. This story is narrated in the Thirupathi Puranam. Therefore, the entire month of Purattasi is devoted to special prayers for Lord Mahavishnu and special temple meals for all devotees on Saturdays. Devotees observe a strict fast the whole month of Purattasi in devotion to Perumal.

According to Hindu astrology, Purattasi is known as the month of the zodiac sign Kanni, which the planet Budhan (Mercury) rules. Sri Vishnu is the presiding deity for Budhan. Sani (Saturn) is an ally planet of Budhan (Mercury), and therefore the Saturdays (Sani) of the month of Purattasi are celebrated in a grand manner.  Our Temple observes Thomalai Sevai (Garland Service), Vishnu Sahasranama Homam and Golden Chariot Procession the whole month of Purattasi.

நிகழ்ச்சி நிரல் / Programme:

6.00am சுப்ரபாதம்
Suprabatham
7.00am கோமாதா பூஜை, முத்து அங்கி சேவை, தோமாலை சேவை
Cow Poojai, Muthu Angi Sevai,  Thomalai Sevai
8.00am நித்ய பூஜை
Nithya Poojai
10.30am உபய பூஜை
Ubaya Poojai
10.45am திருப்பாவாடை அன்னதான பூஜை (பிஜிபி அரங்கம்)
Thiruppavadai Annadana Poojai (PGP Hall)
11.00am அன்னதானம்
Annathanam
7.00pm உபய பூஜை
Ubaya Poojai
7.30pm சுவாமி புறப்பாடு Deity Procession
பிரசாதம் வழங்குதல் Distribution of Prasadam

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.