Sri Vaikunda Ekadasi


தமிழ் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியில் ஸ்ரீ வைணவ ஆலயத்தில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தில் வரும் ஏகாதசிகளை விட இந்த ஏகாதசிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு அனைத்து தமிழ் மாதங்களில் வரக்கூடிய வளர்பிறை, தேய்பிறை ஏகாதசியில் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருக்க பகவான் நாமாக்களை சொல்வது பஜனை சொல்வது பலகோடி ஏகாதசியில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்குமோ இந்த ஏகாதசியில் கிடைக்கிறது. வைஷ்ணவ ஆலயங்களில் வடக்கு பாகத்தில் சொர்க்க வாசல் மண்டபம் அமைத்து பெருமாளை எழுந்தருளச் செய்து விசேஷ பூஜைகள் செய்து வடக்கு வாசல் வழியாக பெருமாளை புறப்பாடு செய்வார்கள். அதன்பிறகு பக்தர்கள் தரிசனம் செய்து தாம் பிறந்தது முதல் செய்த பாபங்கள் விலகி மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைகிறார்கள். இதில் பக்தர்கள் ஏகாதசி அன்று குழுவதும் விரதமாக இருந்து பகவானுடைய நாமாக்களை சொல்லுதல், நாம சங்கீர்த்தனம் செய்தல் இது போன்று அன்று முழுவதும் இருந்து இரவு தூங்காமல் மறுநாள் துவாதசி அன்று நீராடி ஆலயத்தில் துவாதசி விசேஷ பூஜை ப்ரசாதங்களை பெற்ற பிறகு விரதம் பூர்த்தியாகிறது. இந்த வைகுண்ட ஏகாதசி நமது ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.  

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.