Sri Periyachiamman Special Poojai


நமது ஆலயத்தில் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் ஒரு முக்கியமான தெய்வமாக விளங்கி வருகிறது. பண்டைய காலம் தொட்டு இந்துக்கள் குறிப்பாக தமிழர்கள் குழந்தை பிறந்த 30வது நாள் முதன் முதலாக ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு குழந்தையை தொட்டிலில் போட்டு வழிபாடு செய்கிறார்கள். ஸ்ரீ பெரியாச்சி அம்மன் ஸ்ரீ மஹா சரஸ்வதியின் உடைய அவதாரமாக ஸ்ரீ மஹா ராஜாவினுடைய மனைவிக்கு மருத்துவச்சியாக சென்று மருத்துவம் பார்த்து அக்குழந்தை தீர்க ஆயிளோடு இருப்பதற்கு அருள் பாலிக்கிறாள். மகாராஜாவிற்கு இருந்த புத்ர தோஷம் நீங்கியது. குழந்தைக்குரிய பாலாரீஷ்ட தோஷம் நிவர்த்தி ஆகிய தீர்க ஆயுள் பெற்றது. அதன் காரணமாக குழந்தை பிறந்த 30வது நாள் ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு சமர்பித்து அனைவரும் வழிபடுகிறார்கள். அச்சிறப்பு மிகு ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு ஆண்டு தோறும் சாந்நித்யம் அதிகரித்து பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு உரிய சிறப்பு நிவேதனங்களுடன், பழங்கள் இலைகளோடு படையல் பூஜை செய்து கடைசி 5ஆம் நாள் இலட்சார்ச்சனை வைபவம் நடைபெறுகிறது.

ஸ்ரீ பெரியாச்சி அம்மன் பூச்சொரிதல், ஸ்ரீ பெரியாச்சி அம்மன் பூஜை, ஸ்ரீ மாரியம்மனுக்கு கரகம், ஸ்ரீ வீரபத்திரர், கதவராயர் சுவாமிக்கு பாளை மற்றும் ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு அக்னி கப்பறை.

ஸ்ரீ திரெளபதை அம்மன் தீமித் திருவிழா சிறப்பாக நடைபெற கொடியேற்றத்துக்கு முதல் நாள் காலையில் பூச்சொரிதல் விழாவும் பிரார்த்தனை செய்து கரகமும். காவல் தெய்வமாக விளங்குகின்ற ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ காதவராயர், ஸ்ரீ வீரபத்திரர் ஆகிய சுவாமிகளுக்கு பாளை சூலியும். ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு அக்னி கப்பறை சமர்பித்து மிக விசேஷமான சிறப்பு மிகு படையல் பூஜை நடத்து பட்டு உலக நன்மைக்காகவும் தீமித்திருவிழா சிறப்பாக நடைபெறவும் பிரார்த்தித்து நடத்தபடுகின்ற பூஜைகள் ஆகும்.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.